கடற்படைசிப்பாய் ஒருவர் தமது மனைவியை குடிப் பழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ள பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
வடமத்திய மாகாணம் தம்புத்தேகமவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுமையான மதுப் போதைக்கு அடிமையான குறித்த பெண் பிள்ளைகளை பராமரிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மது அருந்துவதற்காக பல்வேறு இடங்களுக்கு தமது மனைவி செல்வதாகவும் இதனால் குடும்பத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படைச் சிப்பாய் தெரிவித்துள்ளார்.
தமது மனைவிக்கு அறிவுரை வழங்கி போதைப் பழக்கத்திலிருந்து அவரை மீட்பதற்கு உதவுமாறு கடற்படைச் சிப்பாய், தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை விசாரணை செய்த சிறு குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ரவீந்திர ஜயதிஸ்ஸ, பெண்ணை அழைத்து குடிப் பழக்கத்தை கைவிடுமாறு கோரியுள்ளார்.
எனினும் தம்மால் குடிப் பழக்கத்தை கைவிட முடியவில்லை என குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
31 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
கடற்படைச் சிப்பாயும் அவரது மனைவியும் 12 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
விடுமுறைக்கு வீடு வரும் கடற்படைச் சிப்பாய் மதுபானம் கொண்டு வந்து மனைவிக்கு கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
முதலில் மறுத்த மனைவி பின்னர் மதுப் பழகத்திற்கு அடிமையாகியுள்ளார்.
குடிப் பழக்கம் குடும்பத்திற்கு தீமையானது என பொலிஸார் தெளிவுபடுத்திய போதிலும் அதனை தம்மால் கைவிட முடியாது என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.