எரிபொருள் சிக்கலால் 4 அனல் மின் நிலையங்கள் செயலற்ற நிலையில்!

எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்று உள்ளதாக மின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 400 மெகாவோல்ட் மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக, 300 மெகாவோல்ட் மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.