கண்டி – அன்கும்புர பகுதியில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரனால பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்திய குறித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களில் ஒருவர் அங்குபுர – கபல்கஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து டி.56 ரக துப்பாக்கி மற்றும் காருடன் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.