கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசிய சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசப்பட்டுள்ளது.
குறித்த பகுதியூடாக மணல் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டி சந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பகல் வேளையில் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5 பேரும் குறித்த பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரவு 12 மணிளவில் நடந்து வந்த ஐந்து பேர் கொண்ட குழு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு மிளகாய்பொடியை வீசிவிட்டு அவரிடம் இருந்த ரீ- 56 ரக துப்பாக்கியை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.
தூக்கத்தில் இருந்த ஏனைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விழித்துக்கொண்டதை அடுத்து ஆயுதங்களை பறிக்க வந்த கொள்ளையர்கள் காட்டுப்பகுதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.