கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 முறைப்பாட்டு மனுக்களை ஆராய உயர்நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட சிலர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதனடிப்படையில், இந்த மனுக்களை எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி ஆராய்வதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதத்தை போஷிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளமையை உறுதிப்படுத்தி தீர்ப்பொன்றை வழங்குமாறும் மனுதார்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.