ஹலோ என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை உபயோகிப்பீர்கள் என்று எண்ணியதுண்டா?
ஒருவரிடம் பேச்சுவழக்கில் ஹலோ சொல்பவர்கள் இருப்பார்கள் அல்லது பேஸ்புக் , வாட்ஸ் அப்பில் உரையாடிக்கொண்டிருக்கும்போது பிடிக்காத விடயம் ஏதேனும் வந்தால் எழுத்து வடிவில் ஹலோ சொல்வீர்கள்.
தெரிந்தவரிடம் ஹலோ சொல்வீர்கள், சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது உங்களுக்கு முன்னால் நடந்துசெல்பவர் சற்று விலகி செல்ல வேண்டும் என்பதற்காக ஹலோ என்ற வார்த்தையை மட்டும் உபயோகித்துவிட்டு நகர்ந்து செல்வீர்கள்.
இப்படி, ஒரு நாளைக்கு பலமுறை ஹலோ செல்லும் நீங்கள். இன்றைய நாளில் கண்டிப்பாக ஒரு 20 பேரிடமாவது ஹலோ சொல்லுங்கள்.
ஏனெனில் இன்ற உலக ஹலோ தினம்.
ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து “ஹலோ’ வந்துள்ளது.
ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொள்வதற்கு அச்சாரம் இடுகிறது இந்த ஹலோ என்ற வார்த்தை.
இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.
இத்தினம் எப்படி வந்தது?
1973 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையே நடைபெற்ற போரினை முடிவுக்கு கொண்டு வந்தது.
போர் முடிவுக்கு வந்ததையடுத்து, நவம்பர் 21 ஆம் திகதி இரு நாடுகளும் ஹலோ சொல்லிக்கொண்டனர்.
தற்போது 180 நாடுகளில் இது உலக ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இன்று 43வது ஹலோ தினம். குறைந்தது 20 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.
சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும்.
எனவே, நீங்களும் ஹலோ சொல்லி உங்கள் உறவை மேம்படுத்துங்கள்.