அமெரிக்காவில் போக்குவரத்து விதி முறைகளை மீறியதால் அபராதம் செலுத்த கோரிய பொலிசாரை ஓட்டுனர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகாலை நேரத்தில் சாலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றை பொலிசார் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர்.
மேலும், விதிகளை மீறிய குற்றத்திற்காக பொலிஸ் வாகன இருக்கையில் அமர்ந்தவாரு அபராத சீட்டை எழுதிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, பொலிசாரின் வாகனத்திற்கு பின்னால் மற்றொரு வாகனம் வந்து நின்றுள்ளது. அதில் இருந்து வெளியேறிய ஓட்டுனர் ஒருவர் பொலிஸ் வாகனத்தை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, கண் இமைக்கும் நேரத்திற்குள் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியில் தலையில் சுட்டுள்ளார்.
பின்னர், இரண்டு கார்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
துப்பாக்கி குண்டு பாய்ந்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதித்த பொலிசாரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.