சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி உணவை சாப்பிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி முதல் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் புது டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவ குழு மூலமும் பல்வேறு வகையான உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா ஐ.சி.யூ வார்டிலிருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையில், தனி வார்டில் இருக்கும் அவர் வெகு நேரம் இயற்கையாக சுவாசிப்பதாகவும், சில நேரம் மட்டுமே செயற்கை கருவிகள் மூலம் சுவாசிப்பதாகவும் மற்றும் தொண்டைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிராகோடமி டியூப் மட்டும் அவசரத் தேவைக்காக அகற்றப்படவில்லை என அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், முதல்வருக்கு திரவ உணவு மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டது. இப்போது உணவு முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு நேற்று அவருக்கு இட்லி கொடுக்கப்பட்டது.
தொண்டை பகுதியில் செயற்கை சுவாச கருவி உள்ளதால் அவர் பாதி இட்லி மட்டுமே சாப்பிட்டார், இதையே சிறிது சிறிதாக அதிகப்படுத்தவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.