ஆப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 7, iPhone 7 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
இதேவேளை இதற்கு முன்னர் iPhone 6, iPhone 6 Plus போன்ற கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6 Plus கைப்பேசியின் தொடுதிரை தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பதாக பல பயனர்கள் முறையிட்டுள்ளனர்.
Touch Disease என அழைக்கப்படும் குறித்த பிரச்சினை அதிகளவில் ஏற்பட்டிருப்பதனால் அதனை தீர்த்து வைப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.
அதாவது இப் பிரச்சினை கொண்ட கைப்பேசிகளை திருத்துவதற்கு சாதாரணமாக செலவாகும் பணத்திலும் குறைந்த பணத்தில் திருத்தம் செய்து கொடுக்க முன்வந்துள்ளது.
இதற்கு வெறும் 149 டொலர்களே செலவாகின்றது.
எனினும் தொடுதிரையில் கீறல்கள் ஏற்பட்டோ அல்லது உடைந்தோ இருந்தால் இவ் விசேட சலுகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.