கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.
• கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.
• அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.
• மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
• பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.