நளினி கதையைப் படமாக்கினால் ஆஸ்கார் விருதே கிடைக்கும்! கண்கலங்கிய வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, எழுதிய சுயசரிதையை திரைப்படமாக எடுத்தால், ‘ஆஸ்கார் விருது’ கிடைக்கும் என்று வைகோ உருக்கமாக கூறினார்.

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி கடந்த 25 வருடங்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தன்னை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி நீதித்துமன்றத்தில் போராடி வருகின்றார்.

அவர், தன்னுடைய வாழ்க்கையை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், தனது குழந்தை பருவம், முருகனுடன் ஏற்பட்ட காதல், திருமணம், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியது,

சிறையில் நடந்தவை என தன்னுடைய 25 கால வாழ்க்கையை பற்றி தெளிவாக எழுதி இருகிறார்.

ராஜிவ் கொலை. மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா&நளினி சந்திப்பும்’ என்று அந்த புத்தகத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

24.11.2016 அன்று வடபழனி ஆர்.கே.வி ஸ்டூடியோவில் மாலை 4.30 மணி அளவில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.

வைகோ, திருமாவளவன், சீமான், திருச்சி வேலுசாமி, இயக்குநர் புகழேந்தி தங்கரஜ், வழக்கறிஞர் புகழேந்தி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த புத்தகத்தை தொகுத்துள்ள பா. ஏகலைவன் தனது முகநூல் பக்கத்தில், ‘‘எதைச் சொல்லி ஒரு விடுதலை இயக்கத்திற்கு தடை போட்டார்களோ…. எதைச் சொல்லி ஒரு இனத்தின் எழுச்சியை ஒடுக்கினார்களோ… எதைச் சொல்லி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு துணை நின்றார்களோ.. எதைச் சொல்லி தமிழகத்தில் உணர்வாளர்களின், இளைஞர்களின் எழுச்சியை மிரட்டினார்களோ… எதைச் சொல்லி இங்கேயும் அங்கேயும் உலகமெங்கும் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தார்களோ…. அந்த ராஜீவ் காந்தி கொலையில் நடந்த புலன் விசாரணையும், ஓட்டைகளையும் ஆதாரங்களோடு தோலுரிக்கும் புத்தகம்.. இன்றும் ஆறா துயரத்துடன் காத்திருக்கிறார் நளினி முருகன். ’என்று பதிவிட்டுள்ளார்ம.

தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சமீபத்தில், ‘ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின் போது நளினியை பற்றி உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது, நளினி எழுதிய புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏகலைவன் தொகுத்து இருக்கிறார். நேற்றும் படித்தேன். முந்தாநாளும் படித்தேன். படிக்கவே முடியவில்லை.

ஐயோ அவ்வளவு கொடுமைகள் வேறு எங்கும் நடந்து இருக்காது. அப்படி சித்திரவதை செய்து இருக்கின்றார்கள். அது கொடுமையான சித்திரவதை.

‘விசாரணை’ என்று ஒரு படம் எடுத்து இருக்கின்றனர் அல்லவா? அதுபோல நளினியின் கதையை ஒரு இயக்குநர் திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கார் விருது கிடைக்கும். அந்த அளவுக்கு சித்திரவதைகள் என்று சொன்னார்.nalini01