மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி…35 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசூதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும் 35 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள Darul Aman என்ற பகுதியில் தான் இந்த கொலவெறி தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இன்று பிற்பகல் நேரத்தில் அங்குள்ள Shiite மசூதியில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, கூட்டத்திற்குள் மனித வெடிகுண்டாக நுழைந்த ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 27 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், இத்தாக்குதலை அந்நாட்டு பொலிசார் உறுதி செய்துள்ள நிலையில், தற்போது கவலைக்கிடமாக 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் தீவிரவாத இயக்கும் இத்தாக்குதலுக்கு காரணம் இல்லை என அறிவித்துள்ள நிலையில், தாக்குதலுக்கு காரணமானர்களை கைது செய்ய அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.