முன்னாள் ஜனாதிபதியின் மருமகனுக்கு ரூ.5.53 கோடி அபராதம்: காரணம் என்ன?

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள துனிசியா நாட்டு முன்னாள் ஜனாதிபதியின் மருமகனுக்கு சுவிஸ் அரசு ரூ.5.53 கோடி அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துனிசியா நாட்டு முன்னாள் ஜனாதிபதியான பென் அலியின் மருமகன் ஸ்லிம் சிபோப் தற்போது சுவிஸில் குடியேறி வசித்து வருகிறார்.

இந்நிலையில், லிபியாவில் கனடா நிறுவனம் மற்றும் முன்னாள் லிபியா அதிபர் கடாபியின் மகன் உள்ளிட்டவர்களுக்கு உதவும் வகையில் ஸ்லிம் சிபோப் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு சுவிஸில் நடந்து வந்த நிலையில், ஸ்லிம் சிபோப் ஊழலில் ஈடுப்பட்டது உண்மை என சுவிஸ் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் ஆதாரப்பூர்வமாக நிரூபனம் செய்துள்ளது.

எனினும், இதற்கு எதிராக ஸ்லிம் சிபோப் மேல் முறையீடு செய்தார். ஆனால், இம்மேல் முறையீட்டு வழக்கை ஸ்லிம் சிபோப் வாபஸ் பெற்றதால் அவர் மீதான தண்டனை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசினோ மாகாணத்தில் Bellinzona நகரில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு 375000 பிராங்க்(5,53,20,443 இலங்கை ரூபாய்) அபராதமும் இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.