அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் அதிக மக்கள் வாக்குகள் பெற்றுள்ளார்.
The Associated Pressயின் மக்கள் வாக்கு எண்ணிக்கையின் படி கிளிண்டன் 63,390,669 வாக்குகளும், டிரம்ப் 61,820,845 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் கிளிண்டன் 1,569,824 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.
ஜனாநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி 48 சதவீத வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 47 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல முக்கிய தொகுதிகளில் வெற்றிப்பெற்ற டிரம்ப்பின் குடியரசு கட்சி மொத்தம் உள்ள 538 தொகுதிகளில் 276 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளார். எனினும், மக்கள் வாக்குகளில் ஹிலாரியின் வாக்கு எண்ணிக்கையே அதிகம்.