போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய ஆறு குற்றச்சாட்டுக்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அதிகரிக்கப்படுவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க,
1. குடி போதையில் வாகனம் செலுத்துதல்
2. வேகமாக வாகனத்தைச் செலுத்துதல்
3. அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல்
4. காப்புறுதி செய்யப்படாத வாகனத்தை செலுத்துதல்
5. இடது கை பக்கத்தில் வாகனத்தை முந்துதல்
6. ரயில் பாதுகாப்பு கடவையை பொறுப்புணர்ச்சியற்ற வகையில் கடத்தல்
போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.