கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சராக கடமையாற்றிய விமல் வீரவன்சவின் மற்றுமொரு நிதி மோசடி குறித்து நாடாளுமன்றில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மற்றும் வத்தளை நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.
நீதி அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தின் போது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி. விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலி மற்றும் வத்தளை நீதிமன்றங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணம் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 கோடி ரூபா பணத்தை அப்போதைய வீடமைப்புத்துறை அமைச்சர், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.