சூர்யாவின் ‘காக்க காக்க’ வெற்றி விழாவில் ரஜினி பேசிய ஒரு வீடியோ தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரஜினி பேசியபோது, ‘நான் இந்த படத்தை மாறுவேடம் அணிந்து பெங்களூரில் பார்த்தேன். இந்த மாதிரி ஐபிஎஸ் வேடத்தை அற்புதமாக வேறு எந்த நடிகரும் இதுவரை நடித்ததில்லை. சூர்யாவுக்கு முதல் படத்தின்போது டான்ஸ் தெரியாது, சண்டை தெரியாது, ஆனால் தற்போது எல்லாவற்றிலும் அசத்துகிறார் என்று போகிறது அந்த வீடியோ.
சூர்யா ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.,