பெண்களே விரும்பும் பேரழகி சில்க் ஸ்மிதா. கவர்ச்சி நடிகைகளை ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்பதை உடைத்தவர். இவரின் அழகின் ரகசியம் என்ன.? என்று நேரில் கேட்ட பெண்கள் அதிகம். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். வண்டிச்சக்கரம் மூலம் அறிமுகமானார். இவரின் காந்தக் கண்களில் சொக்கிபோனது தமிழ்நாடு.
ஒருமுறையாவது சில்க்கை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப் பட்டவர்கள் கோடிபேர். இவரை தொட்டுவிட ஆசைப்பட்டவர்கள் பல லட்சம் பேர்.
எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தருகிறேன் சில்க் ஸ்மிதாவை அழைத்துவா என்று ஏங்கியவர்கள் லட்சம் பேர். அதை சாதித்தவர்கள் பல நூறு பேர்.
எங்கிருந்தோ வந்தார் ஒரு டாக்டர். வயதானவர். தன்னை கார்டியன் என்று சொல்லிக் கொண்டார். வரவு செலவுகளை கவனித்துக் கொண்டார்.
சில்க் ஸ்மிதாவை முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். ஏற்கனவே அமைதியான சில்க் ரொம்பவே அடங்கிப்போனது ஆச்சரியம்.
காரணம் மிகவும் துணிச்சலானவர். நடிகர் திலகம் முன்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர். சிலர் அதை தவறு என்று சொன்னபோது என்கால் மீதுதானே எனது காலைப் போட்டுள்ளேன் என்று கூறியவர்..!
ஆனால், ஜெமினி சினிமாவிற்கு ஒரு முறை அளித்த பேட்டியில் ஒரு நல்ல ஆண்மகனைக் கூட இதுவரை சந்திக்கவே இல்லை என்று கூறினார்.
இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது..! ஆனால் ரஜினி, கமல் போன்றவர்கள் இது பற்றி எந்த கருத்தும் கூறவில்லை..!
எண்பதுகளின் இறுதியில் சில்க் ஸ்மிதா கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்கிறார்கள். குறிப்பாக அந்த டாக்டரின் பிடியில் இருந்து வெளிவர கடுமையாகப் போராடினார்.
ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. சம்பாதித்த பணம் அத்தனையும் டாக்டர் வசமே போனது. சாலிகிராமத்தில் சில்க் வாங்கிய சொந்த வீடே அவரது பெயரில் இல்லை என்கிறார்கள்.
அந்த கடைசி இரவில் சில்க் வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்கிறார்கள். அதன் பின் தான் சில்க் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்…!
எது எப்படியோ ஒரு நல்ல நடிகையை தமிழ் சினிமா இழந்தது என்பது மட்டு நிஜம்..! இன்று வரை கூட நடிகைகள் தற்கொலை ஒரு தொடர்கதையாகவே உள்ளது என்பது வேதனை…!