இந்தியா உண்மையில் எதோ ஒரு மாற்றத்தை நோக்கி செல்கிறது என்றே தோன்றுகிறது..!
கருப்பு பண விஷயத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள அசாத்திய நடவடிக்கை முதலில் மக்களுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கிய போதும் பின்னர் மக்கள் புரிந்து கொண்டார்கள்.
முழு ஆதரவையும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக சாலையில் வாகன ஓட்டிகளை மடக்கி ஐம்பது நூறு என் வாங்கிக்கொண்டு அனுப்பும் செயல் சுத்தமாக நின்று போனது.
அரசு அலுவலகங்களில் கமிஷனோ, லஞ்சமோ வாங்குவதும் அடியோடு நின்று போனது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆக பிரதமர் என்ன விளைவுகளை நாடு சந்திக்கும் என்று நினைத்தாரோ அது நடக்கிறது..! அடுத்து வரும் காலகட்டங்களில் லஞ்ச லாவண்யங்கள் இல்லாத ஒரு புது இந்தியா உருவாகும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்..!
அசத்துங்கள் பிரதமர் அவர்களே மக்கள் உங்கள் பக்கம் தான்..!