இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு கமல் குணரத்ன அளித்த பேட்டியில், பிரபாகரன் படிக்காதவராக இருந்தாலும், தன்னை சுற்றி கடுமையான ஒழுக்கத்தையே கடைபிடித்து வந்தார் என தெரிவித்திருந்தார்.
தற்கொலை படை தாக்குதலை உருவாக்கியவர் அவர்தான். அல்-கொய்தா தற்கொலைபடை குண்டுதாரிக்கு முன்பே, பிரபாகரன் 200 தற்கொலைபடை குண்டுதாரிகளை வைத்திருந்தார்.
அதில் பெரும்பாலான தற்கொலைபடை குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்து வந்துள்ளனர்.
விடுதலை புலிகள் இயக்கத்தில் பெண் விடுதலை புலிகளை தவறாக பயன்படுத்துவது குறித்து எந்த சான்றும் கிடையாது. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக விளங்கியவர்.
இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் அவரது குடும்பத்தினர் மற்றும் விடுதலை புலிகளின் 10 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட்டனர்.
அதில் ஒரு படத்தில் கூட பிரபாகரன் மது கோப்பையுடன் இருக்கும் காட்சியை காண முடியவில்லை. அவர் அவ்வளவு ஒழுக்கமான தலைவராக இருந்து வந்துள்ளார்.
பிரபாகரன் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர். அவர் ஒரு உறுதியான முடிவை எடுக்க கூடியவர். கடைசி நிமிட போர் வரையிலும் பிரபாகரனின் தலைமைத்துவம் மிகத்திறமை வாய்ந்ததாகவே அமைந்திருந்தது. இறுதி போரில் கடைசி நிமிடங்கள் வரை விடுதலை புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது எனத் தெரிவித்துள்ளார்.