மதனை சிக்க வைத்த அந்த மர்ம பெண் யார்? பொலிசார் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்த வேந்தர் மூவிஸ் மதனை இன்று திருப்பூரில் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் வேந்தர் மூவிஸ் மதன், தான் கங்கையில் சமாதியடைய போகிறேன் என்று கடிதம் எழுதிவிட்டு மாயமாகினார். மேலும், அந்தக் கடிதத்தில் எஸ்.ஆர். எம் குழுமம் குறித்து சில தகவல்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் 200 கோடி ரூபாய் மோசடி புகார் மதன் மீது கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவ சேர்க்கைக்கு பணம் வாங்கி மோசடி செய்ததாக கடந்த யூலை மாதம் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயசந்திரன் புகார் கொடுத்தார்.

மதன் மீதும், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை கொடுத்தனர்.

இதனால் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க தாடியுடன் வந்த வேந்தர் மூவீஸ் மதனை பொலிசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து பொலிசார் ஒருவர் கூறுகையில், வாரணாசி, ரிஷிகேஷ், ஹரிதுவார், திருவனந்தபுரம், கொச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் மதனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதன், சொத்துகளை வாங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மேலும், திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் மதனுடன் போனில் பேசிவருவதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது.

மணிப்பூரிலிருந்து தமிழகத்துக்கு வந்த மதன், திருப்பூரில் நேற்று இரவு ஒரு பெண்ணை சந்திக்க வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி மறைந்து இருந்து அவரை கைது செய்தோம்.

ஆனால் அவரது விவரத்தை வெளியிட மாட்டோம். மதனுக்கு உதவியது அவரது மனைவியின் சொந்தக்காரப் பெண் என்று மட்டும் அவர் தெரிவித்துள்ளார்.