பொதுவாக ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் போல அவர்களின் கைகள், கால்கள் மற்றும் முகங்கள் போன்றவற்றில் சுருக்கங்கள் ஏற்படும்.
இதனால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படுவதால், முதுமை அடைந்தவர்களாக தெரிவார்கள்.
சில பேருக்கு 40 வயது வரை கூட முகத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்கும். ஆனால், அவர்களின் கைகள் முதுமையான தோல்களை வெளிப்படுத்துகின்றது.
எனவே முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதை போல நம்முடைய கை மற்றும் கால்களுக்கும் அதிக பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.
கைகளில் இருக்கும் சுருக்கங்கள் மறைவதற்கான டிப்ஸ்
உருளைக்கிழங்கு
கிழங்குகள் வகையைச் சேர்ந்த உருளைக்கிழங்கில் உள்ள அமிலமானது, நமது சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தின் நிறம் மற்றும் சுருக்கங்களை போக்குகிறது.
உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து, வாரத்திற்கு மூன்று முறைகள் கை மற்றும் கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
முட்டை
நமது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை முட்டை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
மேலும் முட்டையில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளதால், இவை நமது சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் தனியே பிரித்து எடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.இதனால் சுருக்கமான தோல் மறைந்துவிடும்.
ரோஸ்ஹிப் ஆயில்
ரோஸ்ஹிப் எண்ணெய், நமது சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும் சக்திகள் கொண்டது.
எனவே இந்த எண்ணெயை தினமும் நம்முடைய கை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.