அர்ஜென்டீனாவில் நிலநடுக்கம்

அர்ஜென்டீனா – சிலியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.4 ஆகப் பதிவானது.

மேற்கு அர்ஜென்டீனாவின் சான் ஜுன் நகரை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் நிலநடுக்கம் நேரிட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டன. வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்த மக்கள் சாலை, தெருக்களில் குவிந்தனர்.

அண்டை நாடான சிலியிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப் பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்று சிலி கடற்படை உறுதி செய்தது.

இரு நாடுகளிலும் நிலநடுக் கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

கடந்த 13-ம் தேதி மேற்கு அர்ஜென்டீனா பகுதியில் 6.2 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே பகுதியில் மீண்டும் 6.4 என்ற அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்ப தால் அந்த நாட்டு மக்கள் வீடுகளில் தங்குவதற்கு அஞ்சுகின்றனர்.