முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழமையை போன்று மீண்டும் தனது ஊடக பிரச்சாரத்தை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஊடக பிரதானிகளை அழைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் மஹிந்தவினால் வளர்ந்த ஊடக பிரதானிகள், தற்போதும் அவர் மீதும் விசுவாசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மோசடி அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவே மஹிந்தவினால் இவ்வாறு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்கள் நண்பரான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் வாய் திறக்காதவர்கள் இன்னமும் மஹிந்தவின் பின்னால் சுற்றி திரிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.