டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்பட்ட முதலாவது பாதிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவினால் பசுபிக் ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இணையும் இலங்கையின் தீர்மானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டரம்ப் வெள்ளை மாளிக்கைக்கு உத்தியோகபூர்வமாக செல்லும் முதலாவது நாள் பசுபிக் ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையை பொறுப்பேற்ற முதல் தினத்திலேயே இதனை நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் உலக பொருளாதாரத்தின் 40 சதவீதமான பகுதியை கட்டுப்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு பதிலாக, அமெரிக்க கடற்கரையில் வேலைகள் மற்றும் வர்த்தகங்களை நடத்துவதற்கு நியாயமான, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ட்ர்ம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை முதலாவது இடத்திற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளவுள்ள விரைவான 6 செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ட்ரம்ப், பசுபிக் ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்பது அதன் ஒரு செயற்பாடாகும்.

இந்த ஒப்பந்தத்தில் விலகி அமெரிக்கா தனியான பயணத்தில் செல்ல தயாராக இருப்பதாக ட்ரம்ப் தகவல் வெளியிட்டுள்ளார்.

விசேடமாக வர்த்தக நடவடிக்கையில் இருந்து, அகதிகளின் பிரச்சினை, தேசிய பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள், வாஷிங்டனில் புதிய சீர்திருத்தங்கள் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் ட்ரம்ப் இதன் போது அவதானம் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவு திட்ட வாசிப்பின் போது பசுபிக் ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுமாக இருந்தால், அது உலக பொருளாதாரத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தம் 12 நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.