சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா ஆச்சி
இந்தியத் திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை கொண்டவர் ஆச்சி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். சாதனைகளின் மொத்த உருவம் இவர்.
சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம்.
மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்
இப்படம் 1959-இல் வெளிவந்தது. அதனால் கண் திறந்தது ராமநாதன் என்றே குறிப்பிடப்பட்டு வந்தார். தேடி வந்த லட்சுமி உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்தன.
திரைப்படங்களைக் காட்டிலும் இவர் அதிகமாக நாடகங்களிலேயே நடித்து வந்தார். மனோரமாவைத் திருமணம் செய்தவர் 15 நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்க்கை நடத்தினார்.
அதன் பின் தன்னுடன் நாடகங்களில் நடித்து வந்த பங்கஜம் என்பவரை மணந்து கொண்டு அவருடனேயே வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை நடத்தினார்.
ஆச்சி அனைவரையும் சிரிக்க வைத்த போதும் சொந்த வாழ்கையில் மிகவும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்தவர்.
மகன் தனது கலை வாரிசாக உருவாக்க எவ்வளவோ முயன்றும் கூட பூபதி அதற்கு ஒத்துளைகவே இல்லை என்கிறார்கள்.
அவரின் சில பழக்கங்களும் ஆச்சியை மிகவும் வேதனை படுத்தி இருக்கிறது.அது மட்டும் இல்லை நிறைய சட்ட ரீதியான தொந்தரவுகளும் பூபதியால் சந்தித்தார் ஆச்சி என்கிறார்கள்..!
கடைசி ஐந்து வருடங்கள் உடல் ரீதியான பிரச்னைகளும் அவருக்கு அதிகம். இதன் காரணாமாக நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் இருந்தாலும் கூட அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.
நடித்துக் கொண்டிருக்கும் போதே எனது மரணம் நிகழ வேண்டும் என்று ஆச்சியின் விருப்பமாக இருந்தது..! அதுவும் நிறைவேற வில்லை என்பதும் ஒரு வேதனை..!