நாடாளுமன்றத்தில் இருக்கை தொடர்பான விவாதத்தை புறக்கணித்தார் கரு!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் குழுநிலை விவாத்தின் மூன்றாம் நாள் விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கை தொடர்பில் இன்று காலை விவாதிக்கப்பட்டது.

சபாநாயகரின் இருக்கையில் பொறியியலாளர் அமர்ந்திருந்த விடயம் தொடர்பில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சபாநாயகர் இருக்கையில் நாடாளுமன்ற அதிகாரியொருவர் அமர்ந்தவிடயம் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் இருவருக்கு அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபாநயகர் கரு ஜயசூரிய, தான் இது சம்பந்தமாகதனிப்பட்ட ரீதியில் கண்டறிவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்துவதற்கு நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு எந்தஅதிகாரமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இருக்கை தொடர்பான விடயத்தை தான் பார்த்துக்கொள்வதாக குறித்த இருக்கைவிவாதத்தை கரு ஜயசூரிய நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.