இன்றைய காலகட்டத்தில் ஸ்டிரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்களும், அதைக் கேட்காதவர்களும் இல்லை என்றால் அது மிகையாகாது.
கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் என்பது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு விடயமாகும்.
எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதை தான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அதை ஏற்ப்படுத்திக் கொள்ள தெரியாமல் தான் அனைவரும் மன அழுத்ததிற்கு அடிமையாகிறோம்.
மன அழுத்தம் எந்த விடயத்தால் ஏற்படுகிறது என்பதையும், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
- நமக்கு பிடித்த நண்பர்களுடன் வெளியிடம் செல்வது அவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.
- மேலும், எப்பொழுதும் நமக்கு பிடித்தவாறே உடை அணிவது மிகவும் சிறந்தது. இது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- மனக் கஷ்டமாக இருக்கும் பொழுது பிரனாயாமம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். இது நமது மனக் கஷ்டத்தை போக்கும்.
- இறுதியாக ,இயற்கையை ரசிப்பது, மெல்லிசை பாடல்கள் போன்ற மனம் வருடும் விடயங்களுக்காக தினமும் தனியாக சிறிது நேரத்தினை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.