நாம் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல! தவறாக சித்தரிக்க முயற்சி! கொழும்பில் முதன்முதலாக சீ.வி

ஒருவர் கூறவருவதை நாம் புரிந்து கொள்வதற்கு மொழி முக்கியமானதாகும். பல பிரச்சினைகள் உருவாகுவதற்கு விளங்கிகொள்ளாமையே முக்கிய காரணமாக அமைவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் நாம் என்ன கூற வருகின்றோம், எமது தேவை என்பதை சிங்கள மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என தெரிவித்தார்.

நமது கோரிக்கைகளை சரியான முறையில் தெரிந்து கொண்டு எமக்கு உதவுங்கள்.

நாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கோ பௌத்த மதத்திற்கோ எதிரானவர்கள் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் வடமாகாண முதலமைச்சர் கொழும்பில் நடாத்தும் முதல் ஊடக சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.