இத்தாலி தலைநகர் ரோமில் பழைய ஆடைகளை அணிந்து கடின வாழ்க்கை வாழ்ந்து வரும் இளம் பெண்ணை பலர் மாடலின் மெக்கன் என நம்புகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு போர்ச்சுகலுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்ற பிரித்தானியாவை சேர்ந்த மாடலின் மெக்கன் என்ற 3 வயது சிறுமி மர்மமாக காணாமல் போனார். தற்போது வரை மாடலின் மெக்கன் விடயத்தில் மர்மம் நீடிக்கிறது.
இந்நிலையில், ரோமில் சுற்றி திரியும் இளம் பெண், தற்போது 13 வயதிற்கும் மாடலின் மெக்கனாக இருக்க கூடும் என பலர் நம்புகின்றனர்.
மரியா என்ற பெயரில் ரோமில் சுற்றி வரும் இளம் பெண்னை பலர் மாடலின் மெக்கன் என நம்பினாலும். குறித்த இளம் பெண்ணின் கண் மாடலின் மெக்கன் கண் போல் தனித்துவமானது இல்லை என கூறப்படுகிறது.
குறித்த மர்ம பெண்ணின் புகைப்படம் அமெரிக்காவில் காணாமல் போனோர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அமெரிக்க தூதரகம், உள்ளுர் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் அந்த பெண் யார் என்பதை கண்டுபிடிக்கவில்லை.
Lorena Kollobani என்ற ரோம் நகர வாசி கூறியதாவது, இந்த பெண்ணை ரோம் வீதிகளில் பார்த்திருக்கிறேன். அவர், அமெரிக்கர் என கூட எனக்கு தெரியாது. பெண்ணுக்கு மன பிரச்சனைகள் உள்ளது என நினைக்கிறேன்.
அவர் யாரிடமும் பணம் வாங்குவதில்லை, மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார், அவருக்கு இத்தாலி மொழி தெரியாததால் அவர் வெளிநாட்டு மாணவராக இருக்க கூடும் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.