மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரம் தற்போது வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் தமிழ் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன.

குறித்த ஊடகவியலாளர்கள்,2005.11.18 இலிருந்து 2015.01.08 வரையான காலப்பகுதிகளில் 17 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில்,14 தமிழ் ஊடகவியலாளர்களும் 3 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாகவும் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் அதிகளவில் பேசப்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் பிரகித் எக்னெலினெகாட மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த கொலைக்கான முழு விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரும்பாலான கொலைகள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்தல் மற்றும் சுட்டு கொலை செய்தல் வகையில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், 87 ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.medias-kill-list