பொதுநலவாய பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை யாழ்ப்பாணத்தின் பி.ஆஷிகா பெற்றுத்தந்துள்ளார்.
மலேசியாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் , 58 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு இவ்வாறு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளீர் வித்தியாலயத்தில் 10 வகுப்பில் கல்வி கற்கும் குறித்த மாணவிக்கு பாராட்டு விழாவொன்று வட மாகாண ஆளுநர் ரெஜினொல்ட் குரே தலைமையில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.