ரூ.82 லட்சத்திற்கு விலை போன உலகின் மிகவும் மதிப்புமிக்க போகிமொன் அட்டை!

உலகின் மிகவும் மதிப்புமிக்க போகிமொன் அட்டை ஒன்று ரூ.82 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் குறித்த போகிமொன் அடையை ஏலத்தில் வைத்திருந்தனர்.

இதுவரையான அனைத்து சாதனைகளையும் குறித்த போகிமொன் அட்டை தகர்த்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காலிபோர்னியாவின் Beverly Hills பகுதியில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 44,000 பவுண்டு தொகைக்கு (இலங்கை மதிப்பில் ரூ.81,080,80) நபர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு CoroCoro Comic நிறுவனமானது பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்திருந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு போகிமொன் அட்டைகளை வழங்கியிருந்தது.

குறித்த போட்டியில் வெற்றிபெற்ற 30 நபர்களுக்கு அந்த ஜப்பான் நிறுவனம் Pikachu Illustrator அட்டைகளை வழங்கியிருந்தது.

தற்போது சாதனை விலையில் விற்பனையாகியிருக்கும் குறித்த அட்டையானது போகிமொன் ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அந்த நபருக்கே 15 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அட்டையை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

30 அட்டைகள் வெளியடப்பட்டதில் தற்போது 10 அட்டைகள் மட்டுமே சேதமடையாமல் கைப்பற்றியுள்ளதாகவும் மீதமிருப்பவை பொதுமக்களிடம் இருக்கலாம் எனவும் CoroCoro Comic நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.