அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்றும் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் தேறி வருகிறது என்பதற்கு ஆதாரமாக அவரது கையெழுத்து உள்ளது.
தமிழக இடைத்தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யக்கோரி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த 13 ஆம் திகதி கையெழுத்திட்டு ஜெயலலிதா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு அடுத்த நாளே, அப்பல்லோவில் சிகிச்சை பெற்று திரும்பிய அதிமுக அமைப்பு செயலாளர் விசாலாட்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதில், அவருடைய கையெழுத்து தெளிவாக இருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நன்றி தெரிவித்து ஜெயலலிதா நேற்று அறிக்கை வெளியிட்டார். இதில் அவருடைய கையெழுத்து மிகவும் தெளிவாக இருந்தது.
அவருடைய கையெழுத்து தெளிவாக இருப்பதால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது.