CNN நடத்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் Charles Kaiser, கருப்பினத்தவர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், அதனை கேட்ட அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கண்ணீர் வடித்துள்ளார்.
டிரம்ப் ஆதரவாளரை கருப்பினத்தவர் என எதிர்கட்சி நபர் கூறியிருப்பதற்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கண்ணீர் விட்டு அழுததோடு, கண்டனமும் தெரிவித்துள்ளார்.
CNN நடத்திய ஒரு நேரலை நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் Charles Kaiser கலந்து கொண்டார். அவருடன் டிரம்ப் ஆதரவாளர் Paris Dennard – ம் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியை பிரபல பெண் தொகுப்பாளர் Brooke Baldwin நடத்தினார். அப்போது மூவரும் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக எழுத்தாளர் Charles, வெள்ளை மாளிகையின் தலைமை போர் வல்லுனராக Steve Bannon நியமிக்கப்பட்டதை விமர்சனம் செய்தார்.
அப்போது அவர் பேச்சுவாக்கில் கருப்பினத்தவர் என கூறினார். இது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார்த்தையை கேட்டவுடன் தொகுப்பாளர் Brooke அதிர்ச்சியடைந்து கண்ணீர் வீட்டார். பின்னர் அவர் கூறுகையில், என் நிகழ்ச்சிக்கென ஒரு கவுரவமான பெயர் உள்ளது. அதில் எப்படி நீங்கள் தவறான வார்த்தையை பயன்படுத்தலாம் என கூறி, Charles க்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
N என்ற வார்தையை (nigger) இனிமேல் என்னுடைய நிகழ்ச்சியில் பயன்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதனிடையில், தான் யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை. அப்படி நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன் என Charles Kaiser தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.