தனது காதலர் மற்றொரு யுவதியை திருமணம் செய்வதை அறிந்த யுவதியொருவர், மணமகளைப் போன்று ஆடையணிந்து அவ் வைபவத்தில் கலந்துகொண்டு கூச்சலிட்ட சம்பவம், ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பதிவாகிய வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டு, 80,000 இற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. மேற்படி நபரின் திருமண வைபவத்தில் மணமகனைப் பற்றி வாழ்த்துரைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அவரின் மற்றொரு காதலி உள்ளே நுழைந்தார்.
அவரும் மணமகளைப் போன்று நீண்ட வெள்ளை அங்கி, கையுறைகள் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிவாங்கியை பறித்த அப் பெண், பலத்த தொனியில் கூச்சலிடுவதும் அவ் வீடியோவில் பதிவாகியுள்ளது.