பிரித்தானியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் 7.20 பவுண்டுகளாகவும், 21 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கு 6.95 பவுண்டுகளாகவும், 18 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 5.55 பவுண்டுகளாகவும் உள்ளது.
இந்த குறைந்தபட்ச சம்பள உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இங்குள்ள தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதன் அடிப்படையில் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் நடவடிக்கையின் பேரில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான புதிய குறைந்தபட்ச சம்பள நிர்ணயிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்தது.
இதன்விளைவாக, 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளமாக 7.20 பவுண்டுகளில் இருந்து 7.50 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹாமன்ட் இன்று பாராளுமன்றத்தில் வெளியிடுகிறார்.
எதிவரும் 2020 ஆண்டுக்குள் மறுசீரமைக்கப்பட்ட சம்பளம் 9 பவுண்டுகளாக உயர்த்தப்படலாம் என இங்குள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.