ஒரு கண் பார்வையுடன் எட்டு மாதமாக!… ஒரு நபரின் கண்ணீர் கதை

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த எட்டு மாதமாக மொட்டை மாடியில் வசித்து வருகிறார் கேரளாவை சேர்ந்த சஜீவ் ராஜன்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நபர்கள் பற்றியும், அங்கு அவர்கள் கஷ்டப்படும் சம்பவங்கள் பற்றியும் அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் முதலாளிகள் கொடுமைப்படுத்தும் சம்பவமும் அரங்கேறத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மானில் கேரளாவை சேர்ந்த சஜீவ் ராஜன், கடந்த எட்டு மாதமாக ஒழுங்கான உணவு இல்லாமல் மொட்டை மாடியில் தங்கியிருக்கிறார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த சஜீவ் ராஜனுக்கு மனைவி, இரு குழந்தைகள், வயதான பெற்றோர் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்துடன் இவரது ஒப்பந்தம் முடிந்த நிலையில் இந்தியா வர எண்ணியுள்ளார்.

ஆனால் அவர்களோ பாஸ்போர்ட் தர மறுத்துள்ளனர், தனக்கு நியாயம் கிடைக்க இந்திய தூதரகம், தொழிலாளர் நீதிமன்றம் என அலைந்து திரிந்தும் பயனில்லாமல் போனது.

எனவே கடந்த எட்டு மாதங்களாக வீட்டின் மொட்டை மாடியில் வசித்து வருகிறார்.

மூன்று வேளை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படும் சஜீத் ராஜனின் இந்த நிலை குறித்து Khaleej Times என்ற செய்தி வெளியிட்டுள்ளது.b20

b22