பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம்! மாட்டின் மீதான புலியின் காதல்!

உலகில் எத்தனையோ விதமான காதலை கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு காதல் கதையைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள்.

இந்தியா – குஜராத் மாநிலத்தில் வடொடரா மாவட்டத்தில் உள்ள என்டொலி கிராமத்திலேயே இந்த அபூர்வ காதல் மலர்ந்துள்ளது.

மனிதர்களுக்கு இடையிலான காதல், விலங்குகளுக்கு இடையிலான காதல், பறவைகளுக்கு இடையிலான காதல், இவ்வாறு உலகில் காதல் இல்லாதவர்கள் யாருமே இல்லை.

ஆனால் ஒரு புலிக்கு மாடு ஒன்றின் மீது உள்ள காதலையும், அவற்றிற்கு இடையிலான ஆழமான அன்பையும் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

புலி மாட்டை துரத்தி வேட்டையாடுவதைக் கண்டிருக்கின்றோம் ஆனால் மாட்டைத் தேடி வந்து பாசம் காட்டுவதை கண்டிருக்கின்றோமா?

அதேபோல் புலியைக்கண்டால் பாய்ந்து ஓடும் மாட்டை கண்டிருக்கின்றோம், ஆனால் புலியின் மீது தலை வைத்து உறங்கும் மாட்டை கண்டிருக்கின்றோமா?

நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் இது உண்மை. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதை காணலாம்.

காடுகளுக்கு அருகில் மிருக வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு, ஆபத்தான மிருகங்கள் வருவது பொதுவான ஒரு பிரிச்சினையாகவே காணப்படும்.

எனினும் இங்கு புலிக்கும் மாட்டுக்கும் இடையில் அன்பு மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மாட்டின் அரவணைப்பில் புலியும், இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.ti10