30 ஆண்டுகளில் பங்களாதேசில் இந்துக்கள் இல்லை!

இன்னும் 30 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்துக்களே வசிக்கமாட்டார்கள் என வங்கதேசப் பொருளாதாரப் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்துக்கள் சிறுபான்மையினராகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் உள்ள வங்க தேசத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 632 இந்துக்கள் வெளியேறுகின்றனர். இவ்வாறு இந்துக்களின் வெளியேற்றம் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்துக்கள் இல்லாத நிலை ஏற்படும் வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் அபுல் பர்கட் புத்தகம் கூறுகிறது.

வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் அபுல் பர்கட் ‘Political economy of reforming agriculture—land—water bodies in Bangladesh’ என்ற புத்தகத்தை 30 ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு எழுதி முடிந்துள்ளார்.

இந்தப் புத்தகம் குறித்து பேராசிரியர் அபுல், “கடந்த 49 வருடங்களாக வங்க தேசத்திலிருந்து வெளியேறிய இந்து மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்தக் கோணத்தில் பார்க்கப்படவேண்டியுள்ளது” என்று கூறினார்.

’Political economy of reforming agriculture—land—water bodies in Bangladesh’ புத்தக வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 19-ம் தேதி இந்த விழாவில் அபுல் பேசும்போது, “வங்கதேசத்தில் நிலவிய மத துன்புறுத்தல்கள், மேலும் மக்களிடையே அரசு காட்டிய பாரபட்சம் காரணமாக 1964-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 1 கோடியே 13 லட்சம் இந்துக்கள் வங்கதேசத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 30 வருடங்களில் பேராசிரியர் அபுல்லின் நீண்ட ஆராய்ச்சியின் படி, வங்கதேச சுதந்திரத்திற்குப் பிறகு ராணுவ அரசாங்க ஆட்சியில்தான் அதிக இந்து மக்கள் வங்கதேசத்திலிருந்து வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு வங்கதேசத்திலிருந்து வெளியேறிய இந்து மக்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தற்போது வெளியேறும் இந்து மக்களின் எண்ணிக்கை வங்கதேசத்தில் அதிகரித்துள்ளது.

உதாரணத்துக்கு, 1991- ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை வங்கதேசத்திலிருந்து ஒவ்வொரு நாளும் வெளியேறிய இந்துக்கள் எண்ணிக்கை 767 ஆகும்.

வங்கதேசத்தில் பாகிஸ்தான் ஆட்சிக் காலத்தில் இந்துக்களிடமிருந்து அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டன. பின் சுதந்திரம் அடைந்த பிறகு அந்த நிலங்களை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாக மற்றொரு வங்கதேசப் பேராசிரியர் அஜாய் ராய் கூறினார்.

மேலும், மேற்சொன்ன புத்தகத்தில் உள்ள கூற்றுப்படி வங்கதேசத்தில் 60% இந்துக்கள் நிலமற்றவர்களாக உள்ளனர்.

இது குறித்து வங்கதேசத்தைச் சேர்ந்த பல சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அவற்றில் முக்கியமானதாக வங்கதேச முன்னாள் நீதிபதி காசி இபதுல் ஹக, “வங்கதேசத்தில் சிறுபான்மையினர், ஏழைகளின் நிலவுரிமை மறக்கப்படுகிறது” என்று கூறினார்.

மேலும் வங்கதேச ஆதிவாசி மக்களின் தலைவர் சந்து லர்மா கூறும்போது, ”மக்களுக்கான அரசாங்கமே தேவை. ஆனால் அரசின் செயல்பாடுகள் இதனை அனுமதிப்பதில்லை” என்றார்.