தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணமடைந்த மாவீரர்கள் பற்றி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறிய மூன்று முக்கிய சிந்தனை கருத்துக்களை மேற்கோள்களாக ஊடகத் தகவல் மையம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
1. உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள், உயர்ந்தவர்கள்.
2. ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?
3. ஏதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்பட வேண்டும்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் காலத்தில் குறித்த அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் கூறியதாக எழுதப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப்பகுதி எங்கும் 1989ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டுவரைக்கு நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் நவம்பர்27ஆம் திகதி வரைக்கும் மாவீரர் வாரத்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.