சுதந்திர கட்சியை சேர்ந்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் அகில இலங்கை உள்ளுராட்சி உறுப்பினர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுமார் 2000க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு இணைந்து கொள்ளவிருப்பதாக குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஷின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சியில் அண்மையில் பசில் ராஜபக்ஷவும் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.