இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது! அமெரிக்கா திட்டவட்டம்!

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள உள்ளமைக்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறைத் தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் உள்துறை செயலாளர் ஜே ஜோன்சன் ஆகியோருக்கு சக் க்ரேஸ்லி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவினால் நிராகரிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற தகவல்கள் அண்மையில் வெளியாகி இருந்தன.

இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் திட்டம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், அமெரிக்க காங்கிரஸுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதி வருடாந்த அகதிகள் மாநாடு நடைபெற்ற போதும், இந்த திட்டம் குறித்த தகவல்கள் வெளியாக்கப்படவில்லை.

மேலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாளியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளின் அகதிகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது எனவும் அமெரிக்க செனட் சபையின் நீதித்துறைத் தலைவர் சக் க்ரேஸ்லி குற்றம் சுமத்தி உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன.