நம்மில் பலபேர்கள் கோழி முட்டையை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். காடை முட்டை என்று கேட்டாலே, காடை முட்டையெல்லாம் யார் சாப்பிடுவார்கள் என்று கூறுவார்கள்.
ஆனால் கோழி முட்டையை விட காடையின் முட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதே உண்மையாகும்.
காடையின் முட்டையானது, மிகவும் சிறியதாகவும், அதன் மேல் பகுதியில் கருமையான புள்ளிகளுடன் காணப்படும்.
கிராம பகுதிகளில் உள்ள மக்கள் இந்த காடை முட்டையை பச்சையாகவும், குழம்பு வைத்து சமைத்தும் சாப்பிடுவார்கள். கோழி முட்டையை விட காடை முட்டை ருசியாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது.
காடை முட்டையில் விட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.
காடை முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- காடை முட்டையில் உள்ள புரோட்டீன் சத்துக்கள், நமது உடம்பில் ஏற்படும் அலர்ஜி மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- காடை முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், அது நமது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது.
- காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகமாக உள்ளது. எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- அல்சர் உள்ளவர்கள், தங்களின் அன்றாட உணவில் காடை முட்டையை தினமும் சேர்த்து வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை உடனே குணப்படுத்தி விடுகிறது.
- காடை முட்டையை தினமும் சாப்பிட்டு வருவதால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் காடை முட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
- காடை முட்டையானது, நமது உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீக்கி, பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுகிறது.
- தினமும் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, காச நோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களின் உடலை வலிமை அடையச் செய்து, நோய்கள் எளிதில் தாக்காமல் தடுக்கிறது.