சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த ஆறு மாதங்களில் 10 மாலைதீவுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் இந்த போதைப் பொருட்கள், மாலைதீவு உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து இந்த போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் குறித்து மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.