தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சம்மேளனங்களின் குழுக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடந்துள்ளது.
இதில், எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் ஜேர்மன், கனடா, மற்றும் சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.