593 அடி உயரத்தில் முறியடிக்கப்பட்ட உலக சாதனை! மிரள வைக்கும் வீடியோ

அவுஸ்திரேலியா குழுவினர் 593.73 அடி உயரத்தில் இருந்து கூடைப்பந்தை சரியாக கூடைக்குள் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Vallas பகுதியில் உள்ள Mauvoisin அணையில் வைத்தே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்காவை சேர்ந்த THE Dude Perfect குழுவினர் 533 அடி தொலைவிலிருந்து பந்தை சரியாக போட்டு நிகழ்த்திய சாதனையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த Ridiculous குழுவினர் முறியடித்துள்ளனர்.

குறித்த வீடியோவில், Mauvoisin அணையின் மீதிருந்து Ridiculous குழு வீரர் Derek Herron பந்தை போடுகிறார். பந்தை சுமார் 9 நொடிகள் பறந்து சென்ற 593.73 அடி கீழே உள்ள கூடையில் சரியாக விழுகிறது.

இதை Ridiculous குழுவினர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். Derek Herron தனது மூன்றாவது வாய்ப்பிலே பந்தை சரியாக கூடையில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.