விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!…

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு போலி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. உடலுக்கு பக்க விளைவுகளைத் தரக்கூடிய இந்த போலி முட்டைகள் தொடர்பில் அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாடு, சேலத்தில இருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முட்டையாப்பம் செய்வதற்காக பல முட்டைகளை வாங்கி அவற்றினை உடைத்த பெண் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. முட்டைக்கான எந்தவிதமான வாசனையும் அவரால் உணர முடியவில்லை. உடனடியாக சந்தேகப்பட்ட அவர் முட்டையின் கோதுகளை எடுத்து பார்த்தபோது அவை பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் போன்று காணப்பட்டுள்ளது.

மேலும் அக் கோதுகளை நெருப்பில் வைத்தபோது அது எரிந்து ஒட்டும் தன்மையை அடைந்துள்ளது. எனவே இவ்வறான முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பதுடன் ஏனையவர்களுக்கும் பகிர்ந்து உயிர்களைக் காப்பாற்றுவோம்.