சிங்கப்பூரில் சாதித்து பதக்கம் வென்ற இலங்கை கராத்தே வீரர்கள்

கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேரந்த சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok ) உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித்தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளிப் பதக்கங்களையும் எஸ்.ஆதேஷா  குமித்தேயில் வெள்ளிப் பதக்கத்தையும் காட்டாவில் வெண்கலம் எம்.சிறிராம் காட்டா போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

சிரேஷ்ட கறுப்புப் பட்டி வீரர்களுக்கான காட்டா போட்டியில் ஜூடின் சிந்துஜன் சிறந்த எட்டு போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவானார்.

இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல்  கழகத்தின் பிரதம பயிற்றுநர், சிகான். அன்ரோ டினேஷ் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் நடுவர் குழாமினால் அங்கீகரிக்கப்பட்டு மேற்படி சர்வதேச போட்டிக்கு நடுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.