62 வருட ஏக்கத்தை நிறைவேற்றி வைத்தார் பிரதமர்

கொழும்பு 5 இல் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இருந்த 62 வருட ஏக்கத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நிறைவேற்றி வைத்துள்ளார்.

குறித்த பிரபல பாடசாலை கடந்த 62 வருடங்களாக விளையாட்டு மைதானம் இன்றி செயற்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள், மாணவர்களின் விளையாட்டுத்திறன் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு கொழும்பு 5 இல் அமைந்துள்ள Henry Pedris விளையாட்டரங்கத்தை கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு என்பது பாடசாலை வாழ்வின் முக்கியமான ஒரு பங்கு வகிக்கின்றது. 62 வருடங்களாக இந்த மாணவர்கள் தமது விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் மிகுந்த கவலையில் இருந்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு பிரதமர் இன்று மறக்கமுடியாத பரிசை கொடுத்துள்ளார் என்றே கூறவேண்டும்.